உத்தியோகபூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து அபராத தொகை அறவிட நடவடிக்கை
உத்தியோகப்பூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து
அபராத தொகையை பெற்றுக்கொள்ள உள்நாட்டு அலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது.
முன்னாள் அமைச்சர்களில் சிலர் தமது உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைத்துள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
எனினும், அதிகளவானவர்கள் அதனை இன்னும் ஒப்படைக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
அத்துடன், உத்தியோகப்பூர்வ இல்லங்களை ஒப்படைக்குமாறும் அவ்வாறு செய்யாவிட்டால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என, இரண்டாவது நினைவூட்டல் கடிதம் தற்போது அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட வாகனங்களில் அதிகளவானவை தற்போது அமைச்சிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
உத்தியோகபூர்வ அரச இல்லங்களை இதுவரை ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களிடம் இருந்து அபராத தொகை அறவிட நடவடிக்கை
Reviewed by Editor
on
December 25, 2019
Rating:
