(எச்.சாஜீத்)
அக்கரைப்பற்று அம்பாறை பிரதான வீதியின், எட்டாம் கட்டை சந்தியில் இன்று (05) வியாழக்கிழமை வாகன விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பிரதான பாதையால் அதிவேகமாக பயணம் செய்து கொண்டிருந்த கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு விலகி குடை சாய்ந்துள்ளது.
இவ்விபத்து சம்பவத்தில் கார் சாரதி மற்றும் அவருடன் பயணம் செய்த இரண்டு நபர்களும் காயமுற்ற நிலையில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்கள்.
அக்கரைப்பற்று - அம்பாறை பிரதான வீதியில் விபத்து
Reviewed by Editor
on
December 05, 2019
Rating:
