இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள்


இலங்கையில் உள்வாரி பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களுக்கான உயர் கல்வி வாய்ப்புக்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் வழங்கப்படுகின்றன.

Engineering,Law,Management,Arts,Science,
Education போன்ற துறைகளில் இளமானிப் பட்டங்கள் அனைத்தும் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் உள்வாரியாக பல்கலைக்கழக வாய்ப்புக்களை தவறவிட்ட மாணவர்களுக்காக வழங்கப்படுகின்றன.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் அனைத்து பட்டங்களும் உள்வாரிப் பட்டங்களாக கருதப்படும்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகம் ஏனைய 14 அரச பல்கலைக்கழகம் போன்று சம சட்ட அந்தஸ்து கொண்ட அரச பல்கலைக்கழகம் ஆகையால்,இங்கு வழங்கப்படுகின்ற இளமானி கற்கை நெறிகள் அனைத்தும் ஏனைய அரச பல்கலைக்கழகங்களினால் வழங்கப்படும் இளமானிக் கற்கை நெறிகளுக்கு சமனானதாகும்.

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் பொறியியல் பீட இளமானிப் பட்டங்கள் அனைத்தும் INSTITUTE OF ENGINEERS SRI LANKA ஆல் அங்கீகரிக்கப்பட்டிருப்பது விஷேட அம்சமாகும்.

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்கள்
சித்தியடைந்தவர்கள் தாங்கள் விரும்பிய துறைகளை தெரிவு செய்து பட்டப்படிப்புக்களை மேற் கொள்ளலாம்.

உயர்தரப் பரீட்சையில் மூன்று பாடங்களில் சித்தியடையாதவர்கள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தினால் வழங்கப்படும் அத்திவார கற்கை நெறிகளை பூர்த்தி செய்த பின் பட்டப் படிப்புகளை மேற் கொள்ள முடியும்.

ஒ.அரூஸ்
உதவிப் பணிப்பாளர்
திருகோணமலை கற்கை நிலையம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகம்
இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தில் உயர் கல்வி வாய்ப்புகள் Reviewed by Editor on December 29, 2019 Rating: 5