வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் அக்கரைப்பற்றில் இன்று (27) வெள்ளிக்கிழமை மாலை வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்கு மக்கள் பாவனைக்கு திறந்து வைக்கப்பட்டது.
அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு முன்னால் இந்த சமிக்ஞை விளக்கு திறந்து வைக்கப்பட்டது.
வீதி அபிவிருத்தி அதிகார சபையின் கிழக்கு மாகாண மேலதிக பணிப்பாளர் எந்திரி.ஐ.எல். அமீனுல் பாரி அவர்களினால் திறந்து வைக்கப்பட்ட இந்நிகழ்வில் அதிகார சபையின் பிரதம பொறியியலாளர்களான எம்.பி. அலியார், எம்.ரி. சிறாஜுடீன், நிறைவேற்றுப் பொறியியலாளர் கே.எல்.எம். இஸ்மாயில் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அக்கரைப்பற்றில் வீதிப்போக்குவரத்து சமிக்ஞை விளக்கு திறந்து வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
December 27, 2019
Rating:
