(ஆதம்)
அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் 25வருட பூர்த்தியினை முன்னிட்டு, அக்கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரத்ததான முகாம் எதிர்வரும் 25ஆம் திகதி தைக்காநகர் ஸஹ்றா வித்தியாலயத்தில் இடம்பெறவுள்ளது.
உதிரம் கொடுப்போம், உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளில் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிப் பிரிவுடன் இணைந்து அட்டாளைச்சேனை எவர்டொப் விளையாட்டுக் கழகம் ஏற்பாடு செய்துள்ள குறித்த இரத்ததான முகாம் எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் தலைவரும், அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினருமான ஏ.எல்.அஜ்மல் தலைமையில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை (25) காலை 8.30 மணி முதல் பிற்பகல் 3.30மணிவரை இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.
இரத்ததானம் செய்ய ஆர்வமுள்ளோர் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு இரத்தம் தானம் செய்ய முடியும் என எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் எம்.எம்.சௌஜான் தெரிவித்தார்.
இரத்தம் தானம் செய்ய விரும்புவோர் 0773786420, 0774794104 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்புகொண்டு தங்களது பெயர்களை முன்கூட்டி பதிவு செய்துகொள்ள முடியும் எனவும் அக்கழகத்தின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.
எவர்டொப் விளையாட்டுக் கழகத்தின் 25வருட பூர்த்தியினை முன்னிட்ட இரத்ததான முகாம்
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
