நாட்டு கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் கிழக்கு ஆளுநருக்கு சிப்லி பாரூக் கடிதம்



எமது நாட்டு கலாச்சாரத்திற்கு முன்னுரிமை கொடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் ஆகியோருக்கு முன்னாள் கிழக்கு மாகாண உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் கடிதம் அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாவது-

கிழக்கு மாகாணத்தில் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தும் முகமாக மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகாமையில் விளம்பரப் பதாகை ஒன்று கிழக்குமாகாண சுற்றுலாதுறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை பல்லின சமூகங்கள் மிக உயர்ந்த பண்பாடுகளுடனும் தமக்கான பிரத்தியேக கலாச்சாரத்தையும் ஒழுக்க ரீதியான உயர்ந்த கோட்பாடுகளை கொண்ட நாடாகும்.

அந்த வகையில் அரசாங்கம் என்பது இவைகளை பாதுகாத்து தமது முன்னெடுப்புக்களை செய்யவேண்டிய கடமைப்பாட்டில் உள்ள மிகப்பெரிய நிறுவனமாகும்.

தனியார் நிருவனங்கள்  தமது வியாபாரத்தை அதிகரித்து அதிக இலாபமீட்டக்கூடிய வகையில் மக்களை கவரும் பலவகை யுக்திகளை கையாண்டாலும் அரசாங்கம் என்பது இலாபத்தை மாத்திரம் மையமாகக்கொண்டு செயற்படமுடியாது.

கிழக்குமாகாண சுற்றுலாத்துறை பணியகத்தினூடாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் புகைப்படம் என்பது எமது நாட்டில் உள்ள எந்தக்கலாச்சாரத்தையும் பிரதிபலிக்காது மேற்கத்திய கலாச்சாரத்திலும் நமது கலாச்சாரத்தில் தாக்கம் செலுத்தக்கூடிய ஓர் புகைப்படம் பிரசுரிக்கப்பட்டிருப்பதென்பது மிகவும் கவலைக்குரியதாகும்.

எனவே அதிமேதகு ஜனாதிபதி அவர்களும், கௌரவ கிழக்கு மாகாண ஆளுனர் அவர்களும் உடனடியாக குறித்த பதாகையில் உள்ள படத்தை நீக்கி நமது நாட்டு கலாச்சாரத்தை பிரதிபலிக்கக்கூடிய உடைகளில் புகைப்படங்களை பிரசுரிக்குமாறு கேட்டு கொள்வதாக முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறூக் இக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
நாட்டு கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் கிழக்கு ஆளுநருக்கு சிப்லி பாரூக் கடிதம் நாட்டு கலாச்சாரத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி ஜனாதிபதி மற்றும் கிழக்கு ஆளுநருக்கு சிப்லி பாரூக் கடிதம் Reviewed by Editor on January 23, 2020 Rating: 5