சுபைரரின் அழைப்பினை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம்


(ஆதம்)

கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத் எதிர்வரும் 28ஆம் திகதி ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சரும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட தலைவருமான எம்.எஸ்.சுபைரின் அழைப்பினை ஏற்றே அவர் இந்த விஜயத்தினை மேற்கொள்ளவுள்ளார்.

ஏறாவூர் பிரதேசத்திற்கு விஜயம் செய்யும் கிழக்கு மாகாண ஆளுநர் அன்றைய தினம் இடம்பெறவுள்ள பல்வேறு அபிவிருத்தி நிகழ்வுகளில் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

 ஏறாவூர் ஆதாார வைத்தியசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியர் விடுதிக் கட்டிடம் மற்றும் ஏறாவூர் ஆயுர்வேத வைத்தியாசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நிருவாகக் கட்டிடம் என்பன அன்றைய தினம் ஆளுநரினால் திறந்து வைக்கப்படவுள்ளது.

அதனைத் தொடர்ந்து ஏறாவூர் பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ள மர நடுகை நிகழ்விலும் கிழக்கு மாகாண ஆளுநர் கலந்துகொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வில் அரசியல்வாதிகள், திணைக்களத் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுபைரரின் அழைப்பினை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம் சுபைரரின் அழைப்பினை ஏற்று கிழக்கு மாகாண ஆளுநர் ஏறாவூர் விஜயம் Reviewed by Editor on January 23, 2020 Rating: 5