(நூருல் ஹுதா உமர்)
கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சின் மேலதிக செயலாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம். சலீம் இன்று (31) முதல் ஓய்வு பெறுகிறார்.
சாய்ந்தமருதூரை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சாய்ந்தமருது கமு/அல்-ஜலால்
மற்றும் மழ்ஹறுஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயம் ஆகியவற்றில் தனது ஆரம்பக் கல்வியை கற்று, அதன்பின் கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் உயர் கல்வியைக் கற்றார்.
பயிற்றப்பட்ட ஆசிரியராக லுனுகலை சோலேன்ட் தமிழ் மகா வித்தியாலயத்தில் தனது முதலாவது அரச சேவை நியமனத்தைப் பெற்ற இவர் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பட்டதாரியாவார். அதன் பின் தான் கல்வி கற்ற பாடசாலையான கல்முனை ஸாஹிறாக் கல்லூரியில் ஆசிரியராக இடமாற்றம் பெற்று கடமையாற்றினார். இதன் போது இலங்கை கல்வி நிருவாக சேவைப் பரீட்சையில் தேறியதன் காரணமாக பிரதியதிபராக அதே பாடசாலையில் பதவியுயர்வு பெற்றார்.
இதே காலத்தில் இலங்கை நிருவாக சேவைப் பரீட்சையிலும் சித்தியெய்தி நிருவாக சேவையில் இணைந்து திருகோணமலையில் 1996ஆம் ஆண்டு உதவி காணி ஆணையாளராக நியமனம் பெற்றார். இப்பிரதேச வரலாற்றில் இலங்கை கல்வி நிருவாக சேவை மற்றும் இலங்கை நிருவாக சேவை இரண்டிலும் சித்தியெய்திய ஒரேயொரு நபராக இவரே காணப்படுகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதே ஆண்டில் கொழும்பு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தில் உதவிக் கட்டுப்பாட்டாளராக கடமையாற்றிக் கொண்டிருந்தபோது சுவிச்சர்லாந்து நாட்டின் ஜெனீவாவிற்கான முதல் செயலாளராக 2001/2002ஆம் ஆண்டில் சேவையாற்றி இடம்பெயர்ந்த தமிழ் மக்களின் அத்தியவசிய தேவைகளை சிறந்த முறையில் கையாண்டமை குறிப்பிடத்தக்கது.
அதன் பின்னர் 2004 வரை விஞஞான தொழிநுட்ப அமைச்சின் உதவிச் செயலாளராகவும் கடமையாற்றிய இவர், ஜனாபதி செயலகத்திலும் இணைக்கப்பட்டு சேவையைத் தொடர்ந்தார். 2005 வரை இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்திலும் பதில் பிரதிப் பணிப்பாளர் நாயகமாக கடமையாற்றியதன் பின்னர், 2007ஆம் அண்டு முதல் 2016ஆம் ஆண்டு வரை சாய்ந்தமருது பிரதேச செயலாளராக கடமையாற்றினார்.
இக்காலத்தில் அக்கரைப்பற்று பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராகவும், தென்கிழக்கு பலகலைக்கழகத்தின் பேரவை உறுப்பினராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 2016 முதல் மேலதிக செயலாளராக சட்டம் ஒழுங்குகள் மற்றும் தென்மாகாண அபிவிருத்தி அமைச்சில் கடமையாற்றி இன்று வரை கைத்தொழில் ஏற்றுமதி மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சிலும் மேலதிக செயலாளராக கடமையாற்றி வருகின்றார். அத்துடன் சிறிது காலம் ஏற்றுமதி சபையின் பதில் தலைவராகவும் கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இவர் பொது நிர்வாகத்துறையில் மட்டுமல்லாமல் கலைத்துறையிலும் சிறி ஜயவர்த்தனபுர மற்றும் பேராதனை பல்கலைக்கழகங்களில் முதுமானிகளைப் பெற்று கல்வியில் உயர்நிலையை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
35 வருட அரச சேவையிலிருந்து ஒய்வு பெற்றார் இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரி ஏ.எல்.எம்.சலீம்
Reviewed by Editor
on
January 31, 2020
Rating:
Reviewed by Editor
on
January 31, 2020
Rating:

