இலங்கை மாணவர்களை அழைத்து வர சீன செல்கிறது விமானம், அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு


சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்கு விமானம் ஒன்றை அனுப்பியுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

UL 1422 என்ற விமானமே வுஹான் நகருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு, குறித்த விமானத்தில் விசேட பயிற்சி பெற்ற சுகாதாரக் குழுவொன்றும் செல்கிறது.

வுஹான் நகரில் இலங்கை மாணவர்கள் 33 பேர் உள்ள நிலையில், அவர்கள் அழைத்துவரப்பட்டதும் அவர்களை விசேட பஸ் ஒன்றின் மூலம் தியத்தலாவைக்கு அழைத்துச் செல்ல நடவடிக்கையும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இவ்விடயங்களைக் குறிப்பிட்டார்.
இலங்கை மாணவர்களை அழைத்து வர சீன செல்கிறது விமானம், அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு இலங்கை மாணவர்களை அழைத்து வர சீன செல்கிறது விமானம், அமைச்சர் பவித்ரா தெரிவிப்பு Reviewed by Editor on January 31, 2020 Rating: 5