ஆயுதங்களும், போதைப்பொருட்களும் கடத்திய வர்த்தகர் பொலிஸாரால் கைது!!


களுத்துறை பண்டாரகம நகர் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டிலிருந்து பெருமளவு போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மாத்தறை பிரதேசத்தை சேர்ந்த இரத்தினக்கல் வியாபரி மல்லி என்பவரின் நீலக்கல் வைரத்தை திருடிய குற்றச்சாட்டில் பொலிஸார் குறித்த வர்த்தகரின் வீட்டை திடிரென்று சோதனையிட்ட போது அங்கு
மூடை கணக்கில் 192 கிலோவுக்கும் அதிகமான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

அத்துடன் வீட்டிலிருந்து பறிமுதல் செய்யப்பட்ட 10 கைத்துப்பாக்கிகள் அமெரிக்கா, பாகிஸ்தான், ஆஸ்திரியா மற்றும் சீனாவில் தயாரிக்கப்பட்ட  அதிநவீன கைத்துப்பாக்கிகள் என்று போலீசார் தெரிவித்தனர்.

போதைப்பொருள்  ஈரானில் இருந்து கடல் வழியாக  மாத்தறை மிரிச கடற்கரை பகுதியூடாக கொண்டு வரப்பட்டு பின்னர் நெடுஞ்சாலை வழியாக களுத்துறை பண்டராகமாவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

ஆயுதங்களும், போதைப்பொருட்களும் கடத்திய வர்த்தகர் பொலிஸாரால் கைது!! ஆயுதங்களும், போதைப்பொருட்களும்  கடத்திய வர்த்தகர் பொலிஸாரால் கைது!! Reviewed by Editor on February 01, 2020 Rating: 5