ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் தொற்று, கல்லூரி பூட்டு


பத்தனை ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் கல்வி பயிலும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீரென நோய்வாய்பட்டுள்ளனர்.

நேற்று (29)சுமார் 100 மாணவர்களும், இன்று (30) வியாழக்கிழமை75 பேரும் இவ்வாறு பாதிக்கப்பட்டு, அவர்கள் கொட்டகலை, டிக்கோயா, கிளங்கள் ஆகிய வைத்தியசாலைகளில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகின்றார்கள்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களுள் சிலருக்கு நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டுள்ளதோடு, அவர்களுக்கு எவ்வகையான வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர் என்பதை கண்டறிவதற்காக இரத்த, சிறுநீர் மாதிரிகள் பேராதனை, கண்டி ஆகிய வைத்தியசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியில் முதலாம் ஆண்டில் கல்வி பயிலும் மாணவர்கள் திடீரென நோய்வாய்ப்பட்டமைக்கு ஒருவகையான வைரஸ் தொற்றே காரணமென கண்டறியப்பட்டுள்ளது.

இதனால் ஶ்ரீபாத கல்வியல் கல்லூரியின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 3ஆம் திகதி வரை இடை நிறுத்தப்பட்டுள்ளதோடு, கல்லூரி வளாகம் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளது.
ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் தொற்று, கல்லூரி பூட்டு ஶ்ரீபாத கல்வியல் கல்லூரி மாணவர்களுக்கு திடீர் தொற்று, கல்லூரி பூட்டு Reviewed by Editor on January 30, 2020 Rating: 5