மொட்டுக் கட்சியின் அக்கரைப்பற்று காரியாலயம் திறப்பு விழா


‌‌சிறிலங்கா பொதுஜன பெரமுனையின்  அக்கரைப்பற்று கட்சிக் காரியாலயம் நாளை (01) சனிக்கிழமை மாலை 4.30மணிக்கு, பொதுஜன பெரமுனையின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், வனஜீவராசிகள் இராஜாங்க அமைச்சரின் இணைப்பாளருமான தேசசக்தி ஏ.எம்.நிஹால் (JP) தலைமையில் இடம்பெறவுள்ளது.

இத்திறப்பு விழா நிகழ்விற்கு பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வனஜீவராசிகள் வளங்கள் இராஜாங்க அமைச்சர் கெளரவ விமலவீர திசாநாயக்க அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று மாநகர மேயர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், சிறப்பு அதிதியாக முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கெளரவ டப்ளியு.டீ.வீரசிங்க அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளனர்.

இந்திறப்பு விழா நிகழ்வுக்கு உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள்.

இடம் - CEB வீதி (பட்டின ஜூம்ஆ பள்ளிவாசல்   முன் வீதி)
மொட்டுக் கட்சியின் அக்கரைப்பற்று காரியாலயம் திறப்பு விழா மொட்டுக் கட்சியின் அக்கரைப்பற்று காரியாலயம் திறப்பு விழா Reviewed by Editor on January 31, 2020 Rating: 5