அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர் றிப்கான் பதியுதீன் இன்று (23) வியாழக்கிழமை குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்ட அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை எதிர்வரும் பெப்ரவரி 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமன்னார் பிரதேசத்தில் அமைந்துள்ள பிற நபருக்கு சொந்தமான சுமார் 40ஏக்கர் நிலப்பரப்பினை போலியான ஆவணங்கள் தயாரித்து கைப்பற்றினார் என்ற குற்றச்சாட்டில் இவரை குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னாள் அமைச்சர் றிஷாட் பதியூதீனின் சகோதரர் கைது
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
Reviewed by Editor
on
January 23, 2020
Rating:
