மின்சாரம் தடைப்பட்டால், குடிநீர் வழங்கலும் தடை!!! அக்கரைப்பற்றில் விசித்திரமான சம்பவம்


(அஜ்வர் அஸீஸ்)

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின், அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்திற்குட்பட்ட அக்கரைப்பற்று நீர் வழங்கல் திட்ட காரியாலயத்தில் உள்ள அவசர தேவைக்காக நீர் ஏத்துவதற்கு பயன்படுத்தப்படும் பல கோடி ரூபா பெறுமதியான ஜெனரேட்டரின் ஒரு உதிரிப்பாகம் சுமார் இரண்டு வருடங்களுக்கு மேல் பழுதடைந்ததால் மின்சாரம் தடைப்படும் போது நீர் வெட்டும் இலவசமாக கிடைத்து இப்பிராந்தியத்தில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மக்களை அசெளகரியத்துக்குள்ளாக்கி வருகின்றதை கடந்த பல மாதங்களாக தெரியப்படுத்தியும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்த சிறிய விடயத்தையையே செய்ய முடியாத இவர்கள் முன்னாள் அமைச்சர் றவூப் ஹக்கீமின் நேரடி தொடர்பில் இருந்தும் மக்களுக்கான சேவையை திட்டமிட்டே செய்ய மறுத்துள்ளார்கள் என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.

இவ்வாறு மக்களை கடும் கஷ்டத்திற்குள் உள்ளாக்கிய முகாமையாளருக்கு எதிராக மக்கள் கேள்வி கேட்க முன்வர வேண்டும் என்பதோடு புதிய அரசாங்கத்திலாவது இதற்கான அவசர தீர்வு கிடைக்க உரிய மேலதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மின்சாரம் தடைப்பட்டால், குடிநீர் வழங்கலும் தடை!!! அக்கரைப்பற்றில் விசித்திரமான சம்பவம் மின்சாரம் தடைப்பட்டால், குடிநீர் வழங்கலும் தடை!!! அக்கரைப்பற்றில் விசித்திரமான சம்பவம் Reviewed by Editor on January 30, 2020 Rating: 5