இனத்துவ அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. அது கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற மன்ற விவாதத்தில் மன்சூர் எம்.பி. தெரிவிப்பு!!!!
இனத்துவ அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. அது கண்டிக்கத்தக்கது. இனத்துவ அரசியல் கட்சிகள் என்பது சாதாரணமாக வந்ததல்ல. தனிச்சிங்கள சட்டத்தின் விளைவாகவே இவைதோற்றம் பெற்றன என மன்சூர் எம்.பி. தெரிவிப்பு.
அத்துடன் முஸ்லிம் தனியார் சட்டத்தை இல்லாமலாக்குவதை நியாயப்படுத்தவே மலைநாட்டு சிங்கள மக்களுக்கான கண்டிச் சட்டத்தையும் நீக்க வேண்டுமென தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தனிநபர் பிரேரணையைக் கொண்டு வந்திருக்கின்றார். எனவும் மன்சூர் எம்.பி. சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்றத்தில் கடந்த வியாழக்கிழமை தாவர, வனவிலங்கினை பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் கீழ் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலே இவ்வாறு மன்சூர் எம்.பி மேலும் கூறுகையிலே – அனைத்து இன மக்களம் ஒன்றாகப் போராடியதன் மூலமே எமது நாட்டிற்கான சுதந்திரத்தைப் பெற்றுக் கொண்டோம்.
ஆனால் சுதந்திரத்தை பெற்று 8 வருடங்களில் தனிச்சிங்கள சட்டத்தை கொண்டுவந்ததன் மூலம் பாரிய பிரச்சினை ஏற்பட்டு இனங்களுக்கிடையில் பிரச்சினையை ஏற்படுத்தும் நிலைக்குச் சென்றது. இதன் பின்னணியே 30 வருட யுத்தத்துக்கு வழிவகுத்தது.
தற்போது பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் முஸ்லிம் விவாக,விவாகரத்துச்சட்டத்தை இல்லாமலாக்குமாறு தெரிவித்து தனிநபர் பிரேரணை ஒன்றை கடந்த பாராளுமன்ற அமர்வில் சமர்ப்பித்திருந்தார். அவர் சமர்ப்பித்திருக்கும் இந்த பிரேரணைக்கு எதிர்ப்புக்கள் எழாமல் இருப்பதற்கும் மலைநாட்டு சிங்கள மக்களுக்கான கண்டிச்சட்டத்தையும் இல்லாமலாக்க வேண்டும். னெ தெரிவத்து மேலுமொரு பிரேரணையை சமர்ப்பித்திருக்கின்றார்.
மலைநாட்டு சிங்கள மக்கள் ஏனைய பௌத்த மக்களுடன் இணைந்து வாழ்வதனால் கண்டிச்சட்டத்தை இல்லாமலாக்குவது தொடர்பாக அவர்கள் கவலைப்பட மாட்டார்கள். ஆனால் முஸ்லிம் தனியார் சட்டம் என்பது ஒரு சமூகத்துக்குரிய சட்டம். அந்த சட்டம் நடைமுறையில் இருப்பதால் யாருக்கும் எந்த பிரச்சினையும் இல்லை. ஆனால் இவ்வாறான பிரேரணை அரசியல் ரீதியான இலக்குகளை வைத்து பெற்றுக் கொள்ளும் நோக்கில் கொண்டு வரப்பட்டுள்ளது. பாராளுமன்றத்துக்கு ஒரு பிரேரணை கொண்டுவரும் போது அது எந்தவொரு இனத்துக்கும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடாது.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ ஆற்றிய கொள்கை விளக்க உரையின் போது இனத்துவ அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றார். ஜனாதிபதியின் இந்த கருத்தை ஏற்க முடியாது. அது கண்டிக்கத் தக்கது.
இனத்துவ அரசியல் கட்சிகள் என்பது சாதாரணமாக வந்ததல்ல. தனிச்சிங்க சட்டத்தின் விளைவாக நாட்டின் ஏற்பட்ட வன்முறைகளின் விளைவாகவே இனத்துவ அரசியல் கட்சிகள் தோற்றம் பெற்றன என்றார்.
இனத்துவ அரசியலுக்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை ஏற்க முடியாது. அது கண்டிக்கத்தக்கது என பாராளுமன்ற மன்ற விவாதத்தில் மன்சூர் எம்.பி. தெரிவிப்பு!!!!
Reviewed by Editor
on
January 26, 2020
Rating:
Reviewed by Editor
on
January 26, 2020
Rating:
