அக்கரைப்பற்று அஸ்-ஸிறாஜ் மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டியின் இறுதி நாள் நிகழ்வு இன்று (06) வியாழக்கிழமை மாலை 2.30மணிக்கு, கல்லூரியின் உள்ளக மைதானத்தில் அதிபர் ஜனாப்.ஏ.எல்.இக்பால் தலைமையில் இடம்பெறவுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களாக இடம்பெற்று வரும் இந்த விளையாட்டு போட்டியின் இறுதி நாளான இன்று, இடம்பெற்று முடிந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் மற்றும் பரிசில்கள் வழங்குவதும் அத்தோடு, பிரிக்கப்பட்டு இருக்கும் மூன்று இல்ல மாணவர்களின் கண் கவரும் விளையாட்டு நிகழ்வுகள் போன்றவையும், அனைத்து நிகழ்வுகளிலும் கூடுதலான புள்ளிகளை பெற்றுக் கொள்ளும் இல்லத்திற்கான வெற்றிக் கேடயமும் வழங்கி வைக்கப்படவுள்ளது.
இன்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு உயர் நீதிமன்ற நீதிபதி கெளரவ அல்-ஹாபீழ் என்.எம்.அப்துல்லாஹ் அவர்களும், கெளரவ அதிதியாக அம்பாறை அரசாங்க அதிபர் காரியாலய பிரதம கணக்காளர் அல்-ஹாஜ் எம்.ஐ.எம்.முஸ்தபா அவர்களும், விசேட அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு.கே.எம்.ஏ.கே.பண்டார அவர்களும், இவர்களுடன் பாடசாலை அபிவிருத்தி சங்க மற்றும் பழைய மாணவ சங்க பிரதிநிதிகளும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
இந்நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழுவினர்.
இல்ல விளையாட்டு போட்டி - 2020
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:
Reviewed by Editor
on
February 06, 2020
Rating:
