பஸ் விபத்தில் 5பேர் பலி, 60பேருக்கு மேற்பட்டோர் படுகாயம்


கொழும்பு, திருகோணமலை பிரதான பாதையின் தம்பலகமம் 99ஆம் கட்டைப் பகுதியில் இன்று (06) வியாழக்கிழமை அதிகாலை நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரச பேருந்துடன் தனியார் பஸ் மோதியதில் 5பேர் பலியானதுடன், 60பேருக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இன்று (06) வியாழக்கிழமை அதிகாலை 5.00மணியளவில் கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த அரசுக்கு சொந்தமான பஸ் தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 99ம் கட்டைப் பகுதியில் நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டிருந்த போது பின்னே வந்த தனியார் பஸ் மோதியதில் 5பேர் மரணமானதுடன், 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து கந்தளாய் மற்றும் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

விபத்துக்குள்ளான இரண்டு வாகனங்களும் பாரிய சேதத்திற்குள்ளாகியதுடன்,விபத்து தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பஸ் விபத்தில் 5பேர் பலி, 60பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் பஸ் விபத்தில் 5பேர் பலி, 60பேருக்கு மேற்பட்டோர் படுகாயம் Reviewed by Editor on February 06, 2020 Rating: 5