எமது இலங்கைத் திருநாட்டின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகரசபை சுதந்திர தினக் கொண்டாட்டங்களை வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அக்கரைப்பற்று மாநகரசபையின் நீா்ப்பபுங்காவில் (Water Park) அமைந்துள்ள சமாதான சதுக்கத்தில் அக்கரைப்பற்று மாநகர முதல்வா் அதாஉல்லா அஹமட் ஷக்கி தலைமையில் இடம் பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக முன்னாள் அமைச்சரும், தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம்.அதாஉல்லா அவா்கள் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றிவைத்து நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்து சிறப்புரையாற்றினாா்.
மும்மதங்களின் தலைவா்களின் ஆசியுரையுடனும் நாட்டுக்காக உயிா் நீத்த முப்படை மற்றும் பொலிஸ் மற்று்ம் மூவின மக்களின் தலைவா்களுக்காக இரண்டு நிமிட மௌன பிராா்த்தனையும் இடம் பெற்றது.
பிரதேசத்திலுள்ள அரச திணைக்களங்களின் தலைவா்கள், மாநகர,பிரதேச சபை உறுப்பினா்கள் ஆகியோா்களுடன் பொது மக்களும் கலந்து கொண்டனா்.
பாடசாலை மாணவா்களின் அழகிய அணி நடையும் இடம் பெற்றது.சிறப்பாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த இந் நிகழ்வு தேசிய மட்ட சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இணையாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது மக்களின் பாராட்டையும் பெற்றது.
அக்கரைப்பற்றில் சுதந்திர தின கொண்டாட்டம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது
Reviewed by Editor
on
February 04, 2020
Rating:
Reviewed by Editor
on
February 04, 2020
Rating:
















