அக்கரைப்பற்று தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளது


மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களமும் அம்பாறை மாவட்ட செயலக தொழில் நிலையமும் இணைந்து இம்மாதம் 15ம் திகதி நடத்தவிருந்த தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளதாக அம்பாறை மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரன் தெரிவித்துள்ளார்.

2020ம் ஆண்டுக்கான மாபெரும் தொழில் சந்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ம் திகதி அக்கரைப்பற்று தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

எனினும் இச்தொழிற் சந்தைக்குரிய புதிய திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் தெரிவித்துள்ளார்.

இத் தொழில் சந்தையில், தொழில் வழிகாட்டல்கள், தொழில் திறவுகோல் வேலைத்திட்டம், திறன் அபிவிருத்தி தொடர்பான விளக்கங்கள், அரச தொழில் பயிற்சி நிறுவனங்களின் சுயதொழில் ஊக்குவிப்பு நிகழ்ச்சித்திட்டங்கள், உளவள ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் நடைபெறவுள்ளன.

இதில், அம்பாறை மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள
தொழில் வாய்ப்புகளை எதிர்பார்த்திருக்கும் இளைஞர் யுவதிகள் தங்களது சுய விபரக் கோவைகளுடன் வருகை தருவதன் மூலம் தங்களுக்கு விருப்பமான வேலை வாய்ப்புகள் மற்றும் தொழில் பயிற்சிகளை பெற்றுக் கொள்ள முடியும் என அம்பாறை மாவட்ட தொழில் நிலைய உத்தியோகத்தர் என். கங்காதரன் தெரிவித்ததோடு,மேலதிக விபரங்களுக்கு அவரை தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.

தொடர்புகளுக்கு- 0771578330




அக்கரைப்பற்று தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளது அக்கரைப்பற்று தொழில் சந்தை பிற்போடப்பட்டுள்ளது Reviewed by Editor on February 12, 2020 Rating: 5