இலங்கைக்கு அருகில் இன்று நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பில்லை


இலங்கைக்கு அருகில் நில நடுக்கம் ஒன்று இன்று (12) அதிகாலை பதிவாகியுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் தேசிய சுனாமி முன்னெச்சரிக்கை மையம் அறிவித்துள்ளது.

குறித்த நிலநடுக்கத்தால் இலங்கைக்கு எவ்வித பாதிப்போ, சுனாமி அச்சுறுத்தலோ இல்லை என அந்த மையம் மேலும் தெரிவித்துள்ளது.

இந்நிலநடுக்கம் இலங்கைக்கு தென் கிழக்காக இந்து சமுத்திரத்தில் 10 கிலோ மீற்றர் ஆழத்தில் 5.4 ரிச்டர் அளவில் இன்று அதிகாலை 2.34 மணிக்கு பதிவாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இலங்கைக்கு அருகில் இன்று நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பில்லை இலங்கைக்கு அருகில் இன்று நிலநடுக்கம், இலங்கைக்கு பாதிப்பில்லை Reviewed by Editor on February 12, 2020 Rating: 5