அக்கரைப்பற்று-01ஆம் குறிச்சி, நூராணியா பள்ளிவாசல் மஹல்லாவைச் சேர்ந்த வெள்ளத்தம்பி என்று அழைக்கப்படும் மீராமுகைதீன் என்பவர் இன்று (17) திங்கட்கிழமை காலை யானை தாக்குதலில் உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
இன்று காலை அக்கரைப்பற்றில் இருந்து சாகமம் குளக்கரை பகுதிக்கு அவருடைய தொழில் நிமிர்த்தம் இன்னொரு நபருடன் சென்றுள்ளார். அந்த பகுதியின் வயல் பகுதியில் இவர்கள் நிற்கும் போது அங்கு நின்ற ஒற்றை யானை ஒன்று இவர்களை துரத்தும் போது தரையில் இவர் வீழ்ந்த நேரத்தில் யானை இவரை தாக்கியதால் ஸ்தலத்திலே இவர் உயிரிழந்துள்ளதுடன், இவருடன் சென்றவர் ஓடி தப்பி தனது உயிரை காப்பாற்றியுள்ளார்.
சம்பவ இடத்திற்கு பொலிஸார் மற்றும் அக்கரைப்பற்று நீதிவான் வருகை தந்து, நீதிவான் ஜனாஸாவை பார்வையிட்டு குடும்பத்தாரிடம் ஜனாஸாவை ஒப்படைப்படைப்பதற்கான ஏற்பாடுகளை செய்யும்படி பொலிஸாருக்கு நீதிவான் கட்டளையிட்டு, அதன் பிறகு குடும்பத்தாரிடம் ஜனாஸா ஒப்படைக்கப்பட்டது.
ஜென்னத்துபீவி என்பவரின் கணவரான இவர் மர்ஹூம் சமீர், சபீர் ஆகியோரின் அன்பு தகப்பனாரும், சாந்தி ஹோட்டல் சகோதரர்களின் மச்சானும் ஆவார்.
இவரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அஸர் தொழுகையின் பின்னர் அக்கரைப்பற்று பதுர் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அக்கரைப்பற்றைச் சேர்ந்த ஒருவர் யானை தாக்குதலில் உயிரிழந்தார்
Reviewed by Editor
on
February 17, 2020
Rating:
Reviewed by Editor
on
February 17, 2020
Rating:
