யாழ். மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார்


யாழ்ப்பாண மாவட்ட புதிய மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் தனது கடமைகளை இன்று (17) திங்கட்கிழமை காலை யாழ் மாவட்ட செயலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மட்டக்களப்பு மேலதிக அரச அதிபராகவும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சின் மேலதிக செயலாளராகவும் பதவி வகித்த இவர், முதன்முறையாக மாவட்டச் செயலாளராக யாழ்ப்பாணம் மாவட்டத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

1991ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தொடக்கம் மட்டக்களப்பு,வாழைச்சேனை, வவுணதீவு மற்றும் செங்கலடி ஆகிய பிரதேச சபைகளின் சிறப்பு ஆணையாளராகவும், 2005ஆம் ஆண்டு முதல் சுனாமி வீடமைப்புத் திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட முகாமையாளராகவும், கென்யாவுக்கான இலங்கை தூதரகத்தின் பதில் தூதுவராக பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
யாழ். மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார் யாழ். மாவட்டச் செயலாளராக கணபதிப்பிள்ளை மகேசன் பதவியேற்றார் Reviewed by Editor on February 17, 2020 Rating: 5