கிழக்கு புத்தக திருவிழா அக்கரைப்பற்றில்


புத்தகப் பண்பாட்டை நோக்கிய கிழக்கு புத்தக திருவிழா இம்மாதம் 21,22,23ஆம் திகதிகளில்,அக்கரைப்பற்று பிரதான வீதியில் அமைந்துள்ள செயின் பில்டிங் வளாகத்தில் (அக்கரைப்பற்று பட்டினப் பள்ளிவாசல் அருகில்) நடைபெறவிருக்கின்றது.

இப்புத்தக திருவிழாவின் முதலாவது நாளான வெள்ளிக்கிழமை (21) மாலை 4.00மணி தொடக்கம் இரவு 10.00மணி வரையும், இரண்டாவது மற்றும் மூன்றாவது நாட்களான சனிக்கிழமை (22) ஞாயிற்றுக்கிழமை (23) காலை 9.00மணி முதல் இரவு 10.00மணி வரை இடம்பெறும்.

இந்நிகழ்வில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றார்கள் ஏற்பாட்டுக் குழுவினர்.
கிழக்கு புத்தக திருவிழா அக்கரைப்பற்றில் கிழக்கு புத்தக திருவிழா  அக்கரைப்பற்றில் Reviewed by Editor on February 18, 2020 Rating: 5