மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கட்டாயம் கையெழுத்திடுவார், அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு


மக்கள் வழங்கியுள்ள ஆணையின் அடிப்படையில் எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி நள்ளிரவு பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கட்டாயம் கையெழுத்திடுவார் என அமைச்சர் தினேஸ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை துரித கதியில் கொண்டு செல்ல பலமான பாராளுமன்றமொன்று அவசியமாக காணப்படுகிறது. நாட்டை வெளிநாடுகளுக்கு ஒவ்வொரு பகுதியாக விற்ற அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்பியுள்ளோம் என்று தெரிவித்தார்.

மார்ச் மாதம் முதலாம் திகதி நள்ளிரவுடன் தற்போதைய பாராளுமன்றத்துக்கு  நான்கரை வருடங்கள் நிறைவடைகின்றன. மக்கள் வழங்கிய ஆணையின் அடிப்படையில் அன்றைய தினம் நள்ளிரவே பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கையெழுத்திடுவார் என்று அமைச்சர் தினேஷ் குணவர்தன பாதுக்கையில் நேற்று (15) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.

மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கட்டாயம் கையெழுத்திடுவார், அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு மார்ச் முதலாம் திகதி பாராளுமன்றத்தை கலைப்பதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதி கட்டாயம் கையெழுத்திடுவார், அமைச்சர் தினேஷ் தெரிவிப்பு Reviewed by Editor on February 16, 2020 Rating: 5