அக்கரைப்பற்றின் பிரதான சுதந்திர தின நிகழ்வு Water Park இல் நடைபெறும்


இலங்கையின் 72 ஆவது தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு அக்கரைப்பற்று மாநகர சபையினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான சுதந்திர தின நிகழ்வு நாளை செவ்வாய்க்கிழமை (04) காலை அக்கரைப்பற்று "Water Park" ( நீர் வழங்கல் பிராந்திய முகாமையாளர் காரியாலய அருகாமையில்) இல் இடம்பெறவுள்ளது.


அக்கரைப்பற்று மாநகரம் தேசியக் கொடியால் அழகுபடுத்தப்பட்டும், அக்கரைப்பற்றில் உள்ள அனைத்து அரச மற்றும் தனியார் நிறுவனங்களிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டும், விழா நடைபெறும் Water Park அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றது.

அக்கரைப்பற்று மாநகர முதல்வர் கெளரவ அதாஉல்லாஹ் அஹமட் ஸகி தலைமையில் இடம்பெறவுள்ள இச்சுதந்திர தின விழாவில்   பிரதம அதிதியாக தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான கெளரவ  ஏ.எல்.எம்.அதாஉல்லாஹ் கலந்து கொள்ளவுள்ளதுடன், விசேட அதிதிகளாக அக்கரைப்பற்றிலுள்ள அனைத்து அரச, தனியார் நிறுவனங்களின் பிரதானிகள், பொலிஸ், முப்படை உயர் அதிகாரிகள், வர்த்தகர்கள் மற்றும் பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இளைஞர் அமைப்புக்கள், விளையாட்டு கழகங்கள், பொது நிறுவனங்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அக்கரைப்பற்றின் பிரதான சுதந்திர தின நிகழ்வு Water Park இல் நடைபெறும் அக்கரைப்பற்றின் பிரதான சுதந்திர தின நிகழ்வு Water Park இல் நடைபெறும் Reviewed by Editor on February 03, 2020 Rating: 5