வெலிக்கடை மகசீன் சிறைச்சாலைக்கு முன்னறிவித்தலின்றி ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச இன்று (10) திடீர் விஜயம் ஒன்றினை அங்கு மேற்கொண்டிருந்தார்.
ஜனாதிபதி அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் சிறுகுற்றக் கைதிகளுடன் உரையாடலில் ஈடுபட்டார்.
விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதியிடம் பல்வேறு கோரிக்கைகளை அங்கிருந்த அதிகாரிகள் மற்றும் கைதிகள் எடுத்துரைத்தனர்.
சிறைச்சாலையில் சனநெருக்கடி, பொய்யான குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகியுள்ள தங்களது வழக்குகள், நியாயத்துக்கு மாறாக தாமதப்படுத்தப்படுவதால் தாம் நீண்ட சிறை வாழ்வை அனுபவிக்க வேண்டியிருப்பதாக கைதிகள் தெரிவித்ததோடு, சிறையின் சன நெருக்கடிக்கு அதுவும் பிரதான காரணம் எனவும், பரிந்துரைக்கப்பட்ட தொகையை விடவும் மும்மடங்கு கைதிகள் சிறையில் இருப்பதாகவும் அவர்கள் மேலும் தெரிவித்தார்கள்.
அனைத்து நிலைமைகளையும் செவிமடுத்த ஜனாதிபதி உடனடியாக இதனை ஆராய ஒரு குழுவை நியமிப்பதாக அவர் உறுதியளித்தார்.
மகசீன் சிறைச்சாலைக்கு ஜனாதிபதி திடீர் விஜயம்
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:
Reviewed by Editor
on
February 10, 2020
Rating:

