SLMC இல் நான் இணைவது பற்றிய செய்தி அப்பட்டமான பொய், ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு


சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இனைவதற்கான பேச்சு வார்த்தை எதுவுமில்லை , இது விஷமிகளால் பரப்பப்பட்டுவரும் செய்தி என கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.ஏ.எல்.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்‌ஏ.எம்.ஹிஸ்புழ்ழாஹ் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெறுவதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரப்பபட்டு வருகின்ற நிலையில் இது தொடர்பாக  ஹிஸ்புல்லாஹ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார்

இதில் எந்தவிதமான உண்மை தன்மையும் இல்லை, இது ஒரு அப்பட்டமான பொய்யாகும்.

என்மீது சேறு பூசுவதற்காக சில விஷமிகளால் இந்த செய்தி பரப்பப்பட்டு வருகின்றது. இதனால் யாரும் குழப்பமடைய தேவையில்லை" என முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர்  ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார்.
SLMC இல் நான் இணைவது பற்றிய செய்தி அப்பட்டமான பொய், ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு SLMC இல் நான் இணைவது பற்றிய செய்தி அப்பட்டமான பொய், ஹிஸ்புல்லாஹ் தெரிவிப்பு Reviewed by Editor on February 11, 2020 Rating: 5