நீண்ட நாட்களாகத் தொடரும் தோப்பூர் மக்களின் மிக முக்கிய தேவைப்பாடான தோப்பூர் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்துவதற்கான முயற்சியை தேசிய காங்கிரஸ் முன்னெடுத்து வருகின்றது.
இதற்கான முயற்சி பன்னெடுங்காலமாக முன்னெடுக்கப்பட்டு வந்த போதிலும் எதிர் அரசியல் காரணமாக அம்முயற்சிகளனைத்தும் இடை நடுவில் கைவிடப்பட்ட வரலாறுகள் அதிகம்.
இந்த விடயத்தில் தேசிய காங்கிரசின் தேசியத் தலைவர் அவர்களால் உருவாக்கபட்ட உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாகத் தரமுயர்த்த விடாது சில அரசியல் பிரபலங்கள் தங்களது அரசியல் காய் நகர்த்தல்களை முன்னெடுத்த கசப்பான கடந்த கால அனுபவங்களை தோப்பூரின் சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள் கண்டுள்ளனர்.
இன்று ஏற்பட்டிருக்கும் ஆட்சி மாற்றத்தின் நீண்ட நாள் பங்காளியான தேசிய காங்கிரஸானது தமிழ் பேசும் மக்கள் எதிர் நோக்கும் இடர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதில் முனைப்புடன் செயலாற்றி வருகின்றது.
இந்த விடயமாக இரு தினங்களுக்கு முன்னர் (09) தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் Dr.YSM.ஸியா அவர்கள் தோப்பூரின் மூத்த புத்தி ஜீவிகள், சிவில் அமைப்புகளின் பிரமுகர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள் போன்றோர்களைச் சந்தித்து உப பிரதேச செயலகத்தின் தரமுயர்வு தொடர்பில் நீண்ட கருத்தாடலை முன்னெடுத்தார்.
இக்கருத்தாடலின் பலனாக இன்று (2020.02.11) தேசிய காங்கிரசின் தேசியத் தலைமை அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் மற்றும் தேசிய காங்கிரசின் தேசிய அமைப்பாளர் Dr.YSM.ஸியா ஆகியோர் தோப்பூரின் மூத்த உலமாக்களையும் புத்திஜீவிகளையும் தம்முடன் இணைத்துக் கொண்டு மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்களை அவரது அமைச்சில் இன்று (11) சந்தித்து இது தொடர்பில் நீண்ட கலந்துரையாடலை முன்னெடுத்தனர்.
இங்கு, தோப்பூர் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதில் காணப்படும் தடைகள் மற்றும் இடர்கள் தொடர்பில் பலமாக கருத்தாடப்பட்டது.
இதில் கௌரவ அல்-ஹாஜ்.ஏ.எல்.எம்.அதாவுல்லாஹ் அவர்கள் தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயர்த்த வேண்டியதன் அவசியத்தினை அமைச்சர் அவர்களுக்கு தெளிபடுத்தினார்.
மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் கௌரவ ஜனக பண்டார தென்னகோன் அவர்கள் வரவிருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் தோப்பூர் உப பிரதேச செயலகத்தை பிரதேச செயலகமாக தரமுயர்த்துவதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை தாம் சமர்ப்பித்து அதனை தரமுயர்த்தித்தருவதாக தேசிய காங்கிரசின் தலைமைக்கு வாக்குறுதி வழங்கினார்.
தோப்பூர் உப பிரதேச செயலகத்தை தரமுயரத்தும் முயற்சியில் தேசிய காங்கிரஸ்
Reviewed by Editor
on
February 11, 2020
Rating:
Reviewed by Editor
on
February 11, 2020
Rating:


