சுதந்திர தினத்தையொட்டி "No Name" கழகம் நடாத்தும் கடின பந்து சுற்றுப்போட்டி


அக்கரைப்பற்று “NO NAME” விளையாட்டுக் கழகம் இலங்கை திருநாட்டின் 72ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நடாத்தும் "NO NAME T10 BLAST NIDAHAS TROPHY 2020”  கடினப் பந்து கிரிக்கட் சுற்றுத் தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (08) அக்கரைப்பற்றில் ஆரம்பமானது.


அக்கரைப்பற்று "NO NAME" விளையாட்டு கழகம் சுதந்திர தினத்தை முன்னிட்டு அணிக்கு 11பேர், 10ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட பகல் நேர கடினபந்து சுற்றுத்தொடரின் ஆரம்ப நாள் நிகழ்வு இன்று (08) சனிக்கிழமை காலை கழகத்தின் தலைவரும் ஆசிரியருமான ஏ.ஜே.பெளசான் தலைமையில் அக்கரைப்பற்று பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது.



ஆரம்ப நாள் போட்டியை ஆரம்பித்து வைப்பதற்கு கழகத்தின் அழைப்பை ஏற்று அக்கரைப்பற்று மாநகர சபையின் கெளரவ முதல்வர் அதாஉல்லாஹ் அஹமட் ஸகி அவர்களும், கெளரவ அதிதியாக அக்கரைப்பற்று பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. கே.எம்.பண்டார அவர்களும், விசேட அதிதியாக பொறியியலாளர் ஜிப்ரி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பிரதம அதிதியாக கலந்துகொண்ட கௌரவ முதல்வர் தேசியக் கொடியையும், பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கழகத்தின் கொடியையும் உத்தியோகபூர்வமாக ஏற்றி நிகழ்வுகளை ஆரம்பித்து வைத்தார்கள்.


நான்கு நாட்கள் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் இறுதிப்போட்டி, பரிசளிப்பு மற்றும் கெளரவிப்பு நிகழ்வும் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (14) மிக விமர்சையாக நடைபெறவிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.



சுதந்திர தினத்தையொட்டி "No Name" கழகம் நடாத்தும் கடின பந்து சுற்றுப்போட்டி சுதந்திர தினத்தையொட்டி "No Name" கழகம் நடாத்தும் கடின பந்து சுற்றுப்போட்டி Reviewed by Editor on February 08, 2020 Rating: 5