(அப்ரா அன்சார்)
2020ம் ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு UTV அலைவரிசை ஏற்பாட்டில் "சிங்கப் பெண்ணே" விஷேட நிகழ்வு நேற்று (09) திங்கட்கிழமை காலை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.
பல துறைகளில் சாதித்த பெண்கள் அழைக்கப்பட்டு இந்நிகழ்வில் கௌரவிக்கப்பட்டதோடு, பல வகையான விற்பனை கூடங்கள் அமைக்கப்பட்டு பெண்களுக்கான பொருட்கள் 50%விலைக்கழிவில் விற்பனை செய்யப்பட்டது.
பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, இந்நிகழ்வு முழுவதும் பெண்களை போற்றுவதற்காகவும் அவர்களை கௌரவப்படுவதற்காகவும் மாத்திரமே நடைபெற்றது எனலாம்.
இந்நிகழ்வு நேற்று காலை 9.00மணிக்கு ஆரம்பமாகி மாலை 6.00வரை இடம்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
மகளிர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற "சிங்கப்பெண்ணே விசேட நிகழ்வு!!!
Reviewed by Editor
on
March 10, 2020
Rating:
Reviewed by Editor
on
March 10, 2020
Rating:
