பறவைகள் அமைப்பின் இலட்சினை அறிமுக நிகழ்வும், நிர்வாகத் தெரிவு மற்றும் மகளிர் தின கவியரங்கும் எதிர்வரும் திங்கட்கிழமை (09) காலை 9.30மணியளவில் ஒலுவில் கிறீன் வில்லா ஹோட்டலுக்கு அருகாமையில் நடைபெறவுள்ளது.
"கண்ணிலே வைத்து பெண்மையைப் பேணுவோம்" என்ற தலைப்பிலான கவியரங்கத்திற்கு கவிதாயினி சித்தி மஷூரா தலைமை தாங்கி கவியரங்கை நிகழ்த்தவுள்ளார்.
நிகழ்வுக்கு விசேட அதிதியாக அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹம்சா அவர்களும், கவிஞர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இலக்கியவாதிகள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பிக்கவுள்ளார்கள்.
இந்நிகழ்வுகள் அனைத்தும் எமது Ceylon East முகநூல் பக்கத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.
பறவைகள் அமைப்பின் இலட்சினை அறிமுகமும், நிர்வாகத் தெரிவும்
Reviewed by Editor
on
March 07, 2020
Rating:
Reviewed by Editor
on
March 07, 2020
Rating:
