அக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளராக எம்.ரீ.ஏ.பாவா நியமனம்


தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளர் காரியாலயத்தின் புதிய பிராந்திய முகாமையாளராக சம்மாந்துறையைச் சேர்ந்த பிரதம பொறியியலாளர் எம்.ரீ.ஏ‌.பாவா இன்று (11) புதன்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றுக் கொண்டார்.

கிழக்கு மாகாண உதவி பொது முகாமையாளர் காரியாலயத்தில் பிரதம பொறியியலாளராக கடமையாற்றி வந்த நிலையிலே,அக்கரைப்பற்று பிராந்திய முகாமையாளராக நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் பொது முகாமையாளரினால் இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பிராந்திய முகாமையாளராக கடமையாற்றி வந்த பிரதம பொறியியலாளர் ஜே.என்.கரீம் மட்டக்களப்பு செயற்திட்ட காரியாலயத்திற்கு பொது முகாமையாளரினால் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளராக எம்.ரீ.ஏ.பாவா நியமனம் அக்கரைப்பற்று நீர் வழங்கல் சபையின் பிராந்திய முகாமையாளராக எம்.ரீ.ஏ.பாவா நியமனம் Reviewed by Editor on March 11, 2020 Rating: 5