கொவிட் 19 - சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு - பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபா அன்பளிப்பு!
பாதுகாப்பு அமைச்சின் கீழ் சேவையில் உள்ள 1200 பேர் தன்னார்வமாக அன்பளிப்பு செய்த ஒரு கோடி ரூபா நிதியை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (07) ஜனாதிபதி செயலாளர் கலாநிதி பீ. பி .ஜயசுந்தர அவர்களிடம் கையளித்தார்.
அதே வேளை - இலங்கை காவல்துறைத் திணைக்களத்தின் சிறப்பு நிதியத்திலிருந்து 05 கோடி ரூபாவினை - பதில் காவல்துறை மா அதிபர் சீ. டீ. விக்ரமரத்ன அன்பளிப்பு செய்தார்.
இன்று பிற்பகல் வரையான வைப்பு மீதியின்படி - கொவிட் 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்தின் வைப்பு மீதி 42 கோடி ஆகும்.
கொவிட் 19 - சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு - பாதுகாப்பு அமைச்சு மற்றும் காவல்துறை திணைக்களத்திடமிருந்து 6 கோடி ரூபா அன்பளிப்பு!
Reviewed by Editor
on
April 07, 2020
Rating:
Reviewed by Editor
on
April 07, 2020
Rating: