மட்டக்களப்பில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம்


மட்டக்களப்பில் அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி  ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு  அரச சுற்றறிக்கைக்கமைய ஏப்ரல் ,மே   மாதம்  வரைக்குமாக  தலா 25 ஆயிரம் ரூபாய்  முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா  அரச திணைக்களத்தலைவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு அண்மையில் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு ஓய்வூதிய திணைக்களம் வழமைக்கு திரும்பி செயல்படும்வரை ஏப்ரல் ,மே   மாதம் வரைக்குமாக  தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம் 50 ஆயிரம் ரூபா முற்பணம் உடனடியாக வழங்குமாறு மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சகல அரச திணைக்களத்தலைவர்களையும்  கேட்டுள்ளார்.

பொதுநிருவாக அமைச்சு விடுத்துள்ள  8/2020  சுற்றறிக்கையில் சகல அரச திணைக்களத்தலைவர்களுக்கும் அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளதாகவும் இவ்விதம் அரசபணியிலிருந்து அண்மையில் இளைப்பாறி இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போர்  தாம் கடைசியாக பணிபுரிந்த திணைக்களத்தின் தலைவரிடம் இதனை கேட்டு பெற்றுக்கொள்ளுமாறும்  இந்த முற்றுபணஓய்வூதியம் பெற்றுக்கொள்வதில் ஏதாவது தடையிருந்தால்  மாவட்ட செயலகத்தின் செயலணி இலக்கமான  065-2222235  உடன் தொடர்பு கொள்ளுமாறு அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு அறிவிக்கின்றார்

இதேபோல் குறித்த இதுவரையில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்குரிய  முற்பண ஓய்வூதியத்தை உடனடியாக அவர்களின் வீடுகளுக்குச்சென்றுபொதுநிருவாக அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டவாறு வழங்குவதற்கு விரைவான நடவடிக்கை எடுக்குமாறும்   மாவட்ட   அரசாங்க அதிபர் திருமதி.கலாமதி பத்மராஜா இம்மாவட்ட சகல அரச திணைக்களங்களின் தலைவர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் மட்டக்களப்பில் ஓய்வூதியம் கிடைக்காமல் காத்திருப்போருக்கு முற்பணம் Reviewed by Editor on April 07, 2020 Rating: 5