5,000 பஸ்கள் மற்றும் 400 ரயில்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்த அரசு முடிவு


நாடு முழுவதும் இலங்கை போக்குவரத்துச் சபையின் 5 ஆயிரம் பேருந்துகளும் 400 ரயில்களும் நாளை மறுதினம் (20) திங்கட்கிழமை முதல் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சு அறிவித்துள்ளது.

எனினும் இந்த சேவை,அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரமே பயணிகள் பொதுப் போக்குவரத்தில் அனுமதிக்கப்படுவதுடன், இதில் கட்டுப்பாடுகளும் நடைமுறைப்படுத்தப்படும் என்றும் போக்குவரத்து அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

5,000 பஸ்கள் மற்றும் 400 ரயில்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்த அரசு முடிவு 5,000 பஸ்கள் மற்றும் 400 ரயில்கள் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுத்த அரசு முடிவு Reviewed by Editor on April 18, 2020 Rating: 5