(ஏ.ஜி.ஏ.கபூா்)
அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனம், அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபை மற்றும் சமூக சேவை அமைப்புக்கள் இணைந்த அக்கரைப்பற்று அவசர நிவாரணப் பணிக்குழு கொவிட்-19 கொரோனா காரணமாக தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண சூழ்நிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவா்களுக்கான உலா் உணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கை நேற்று (17) அக்கரைப்பற்று பட்டியடிப்பிட்டி ஏ.எஸ்.ஆா்.எம். அாிசி ஆலை வளாகத்தில் அனைத்துப் பள்ளிவாயல் சம்மேளனத் தலைவரும், அவசர நிவாரணப் பணிக் குழு செயலாளருமான எம்.பி.அப்துல் ஹமீட் தலைமையில் இடம் பெற்றது.
நிகழ்வில் நிவாரணப் பணிக் குழுவின் செயற்பாட்டுக்குத் தேவையான வழிகாட்டல் ஆலோசனைகளையும்,தேவையான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட தேவையான அனுமதிகளையும் வழங்கி உத்துழைப்பு வழங்கி வருகின்ற அக்கரைப்பற்று மாநகர மேயா் அதாஉல்லாஹ் அஹமட் ஷக்கி, அக்கரைப்பற்று பிரதேச செயலாளா் அஷ்-ஷேய்க் எம்.எஸ்.எம்.றஸ்ஸான், அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எம்.றாசீக், அக்கரைப்பற்று மாநகர சபை உறுப்பினரும், அக்கரைப்பற்று ஜும்ஆ பொிய பள்ளி வாயல் தலைவருமான எஸ்.எம்.ஸபீஸ், அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாாி டாக்டர் திருமதி பருஷா நக்பா், ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவா் எம்.எம்.கலாமுல்லா மௌலவி, அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாாி, நிவாரணப் பணிக் குழுவின் தலைவரும் அனைத்துப் பள்ளி வாயல் சம்மேளனத் தலைவருமான எச்.சி.எம்.லாபிா், குழுவின் பொருளாளா் பொறியியலாளா் எஸ்.முா்ஷித், உறுப்பினா்களான மாவட்ட கலாசார உத்தியோகத்தா் ஏ.எல்.தௌபீக், தென் கிழைக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விாிவுரையாளரும் பணிக் குழு உறுப்பினரும். அக்கரைப்பற்று கல்விப் பேரவை தலைவருமான பேராசிாியா் ஏ.எம்.முஸாதிக், உள்ளிட்ட நிவாரணப் பணிக் குழு உறுப்பினா்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை பிரதம பொறியியலாளா் என்.ரி.சிறாஜுதீன்,மற்றும் இந்த நல்ல மனிதாபிமானப் பணிக்கு உதவிய தனவந்தா்கள், தொழில் அதிபா்கள், வா்த்தகா்கள் உள்ளிட்ட சமூக சேவையாளா்கள், சமூக சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள், ஜம்மியத்துல் உலமா சபை பிதிநிதிகள், பொதுச் சுகாதாரப் பாிசோதகா்கள், என ஏராளமானோா் கலந்து கொண்டனா்.
கொடிய கொவிட்-19 - கொரோனா நோயிலிருந்து நாட்டிலுள்ள அனைத்து சமூகங்களைச் சோ்ந்தவா்களையும் பாதுகாக்குமாறும், கொரோனா தொற்றுக்குட்பட்டவா்கள் அனைவரும் விரைவில் புரண சுகமடையவும் வேண்டி அக்கரைப்பற்று ஜம்மியத்துல் உலமா சபையின் பிரதித் தலைவா் எம்.எம்.கலாமுல்லா மௌலவி துஆப் பிராா்த்தனை செய்தாா்.
இதன்போது சகல கிராம உத்தியோகத்தா் பிாிவுகளிலிருந்தும் தொிவு தொிவு செய்யப்பட்ட 3200 குடும்பங்களுக்கு 2000 ரூபா பெறுமதியான அாிசி, சீனி, பால்மா உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் கொண்ட உலா் உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன. ஏற்கனவே சில தினங்களுக்கு முன்னா் அக்கரைப்பற்று -19 பிாிவில் லொக் டவுன் பிரதேசத்தில் உள்ள 320 குடும்பங்களுக்கு 3000 ரூபா பெறுமதியான அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்பட்டது.
இந்தப் பணிக்கு பணம், அாிசி மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கியவா்களுக்கும், வழிகாட்டல், ஆலோசனை, நெறிப்படுத்தல், அனுமதி, பாதுகாப்பு வழங்கிய கௌரவ மேயா், கௌரவ தவிசாளா், பிரதேச செயலாளா், சுகாதார வைத்திய அதிகாாி, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாாி, அக்கரைப்பற்று இராணுவத்தின் 241வது படைப்பிாிவின் கட்டளையிடும் அதிகாாி, நிவாரணப் பணிக் குழு உறுப்பினா்கள் அனைவருக்கும் அவசர நிவாரணப் பணிக் குழு செயலாளா் எம்.பி.அப்துல் ஹமீட் நன்றி தொிவித்தாா்.
உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:


