புதிய செயலி (Application) அறிமுகம்


இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்துடன் (Information and Communication Technology Agency of Sri Lanka - ICTA) இணைந்து - சுகாதார, ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவ சேவைகள் அமைச்சு "எனது ஆரோக்கியம்" - My Health, Sri Lanka” என்ற திறன்பேசி செயலிப் பயன்பாட்டை (Smart Phone Application) அறிமுகப்படுத்தியுள்ளது.



இந்த செயலி - நாட்டில் கோவிட் -19 நோய்த்தொற்றின் தற்போதைய நிலைமை பற்றிய தகவலைப் பெறுதல், அவசர மருத்துவத் தேவைகளுக்கான அழைப்புக்களை நேரடியாக மேற்கொள்ளல் மற்றும் தேவையான இணைய வழி மருத்துவ ஆலோசனைகளைப் பெறல் போன்ற பல சுகாதார வசதிகளை வழங்குகிறது.

நாட்டின் தற்போதைய சுகாதார நெருக்கடி நிலையைக் கருத்தில் கொண்டு இந்தத் தொலைப்பயன்பாட்டு வசதியினை பெற்றுக் கொள்ளுமாறு அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
புதிய செயலி (Application) அறிமுகம் புதிய செயலி (Application) அறிமுகம் Reviewed by Editor on April 09, 2020 Rating: 5