சீனா அரசாங்கத்தின் அனுசரணையில் ஒரு தொகை அத்தியாவசிய மருத்துவ உபகரணங்கள் நேற்று (17) வெள்ளிக்கிழமை "MU231" விமானத்தின் மூலம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்தன.
இந்த அன்பளிப்பு சுமார் 693,000 அமெரிக்கா டொலர்களுக்கும் அதிகமான பெறுமதியுடையதாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கு சீனாவால் வழங்கப்பட்ட உதவிகள் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அவற்றின் விபரம் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது-
1. கொரொனா பரிசோதனைத் துடைப்புக் குச்சிகள் 20,000
2. N95 வகை முக கவசங்கள் 10,000
3. மருத்துவ முக கவசங்கள் 10,0000
4. PPE பாதுகாப்பு உடைகள் 10,000
5.மருத்துவக் கண்ணாடி வகைகள் 1,000
6.மருத்துவ கையுறைகள் 50,000 போன்றவையாகும்.
தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இலங்கைக்கு சீன அரசாங்கம் உதவி செய்வதையிட்டு இலங்கை ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
சீனா அரசு இலங்கைக்கு உதவியுள்ளது
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:
Reviewed by Editor
on
April 18, 2020
Rating:

