போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார்


கொரோனா வைரசுக்கு தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன், பூரண சுகமடைந்து இன்று (12) வீடு சென்றுள்ளார்.

பிரதமர் போரிஸ் ஜான்சனுக்கு (55) கொரோனா வைரஸ் தொற்று கடந்த மாதம் உறுதி செய்யப்பட்டு அவர் தன்னைத்தானே 10 நாட்களுக்கு வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார். ஆனால், வைரஸ் தொற்றின் தாக்கம் குறையாததால் அவர் ஏப்ரல் 6-ம் திகதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மறுநாளே அவரின் உடல்நிலை மிகவும் மோசமடைந்தது, அவர் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசக்கருவிகளின் உதவியுடன் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

சிகிச்சை பெற்று வந்த ஜான்சனின் உடல்நிலை கடந்த சில நாட்களாக நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததையடுத்து, அவர் இன்று வீடு திரும்பியுள்ளார்.

போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார் போரிஸ் ஜான்சன் வீடு திரும்பினார் Reviewed by Editor on April 12, 2020 Rating: 5