இவர்களின் சேவையை பாராட்டுகிறேன், ஜனாதிபதி தெரிவிப்பு


கொரோனா - Covid 19 - நோய்த்தொற்று சாத்தியம் உள்ளவர்களுடமிருந்து பரிசோதனை மாதிரிகளை எடுப்பதற்கான “சுரப்பு துடைக்கும் குச்சி” களை (Testing Swabs) உள்நாட்டிலேயே தயாரிக்க அர்ப்பணிப்போடு கடுமையாக உழைத்த SLINTEC (Sri Lanka Institute of Nanotechnology) விஞ்ஞானிகளை அதிமேதகு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச பாராட்டியுள்ளார்.

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்திற்குத் தேவையான இந்த பரிசோதனைக் குச்சிகளை, நாளொன்றுக்கு 3000 வீதம் உற்பத்தி செய்யத்தக்க வினைத்திறனான பெரும் பங்களிப்பை வழங்கவுள்ள மேற்படி முயற்சி உள்நாட்டிலேயே எடுக்கப்பட்டமையையிட்டு பெருமை கொள்வதாக ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச அறிவித்துள்ளார்.
இவர்களின் சேவையை பாராட்டுகிறேன், ஜனாதிபதி தெரிவிப்பு இவர்களின் சேவையை பாராட்டுகிறேன், ஜனாதிபதி தெரிவிப்பு Reviewed by Editor on April 13, 2020 Rating: 5