ஜனாதிபதியின் ரமழான் செய்தி



இன்று (25) இலங்கை முஸ்லிம்களின் ரமழான் நோன்பின் ஆரம்ப தினமாகும். ரமழான் மாதம் ஆன்மீக வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் சுய ஒழுக்கம் என்பவற்றை மேம்படுத்தக்கூடியது. தம்மை விட வசதி குறைந்தவர்களின் நிலையை உணர்ந்து கருணையுடன் உதவும் காலமாகும் என்று ஜனாதிபதி அதிமேதகு கோட்டபாய ராஜபக்ச தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் தமது வீடுகளில் இருந்தவாறே பாதுகாப்பாக நோன்பை நோற்குமாறு வேண்டிக்கொள்வதோடு உங்களுக்கு எனது ரமழான் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் ரமழான் செய்தி ஜனாதிபதியின் ரமழான் செய்தி Reviewed by Editor on April 25, 2020 Rating: 5