தொற்று நோய்கள் ஏற்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்


(MSM.Bishrin)

covid-19 தொற்று உலகை ஆர்ப்பரித்து கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் ஒரு தனிநபர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்க்கான அறிவுறுத்தல்களை உலக சுகாதார தாபனம் வழங்கியுள்ளது.

சாதாரணமாக நாம் நினைத்து கொண்டிருக்கும் கை கழுவுதல் என்னும் அம்சம் மிகவும் முக்கிய அம்சமாக மாறி , எவ்வாறு கைகளை கழுவவேண்டும் என்பது பற்றிய விளக்கங்கள் ஊடகங்கள் மூலம் காட்சிப்படுத்தப்படுகின்றது.

இந்நிலையில் , இஸ்லாம் தீர்க்க தரிசனமான மார்க்கம் என்பதனால் சுமார் 1500 வருடங்களுக்கு முன்னதாகவே இறை தூதர் நபி முஹம்மத் (ஸல் ) அவர்கள் இப்படியான நோய்களின் போதும் ஏனைய சந்தர்ப்பங்களில் போதும் நாம் பின்பற்றி நடக்க வேண்டிய ஒழுங்குகள் தொடர்பாக கூறிவிட்டார்கள்.

ஹதீஸ்களின் வெளிச்சத்தில் அவை பின்வருமாறு,

1 . கைகளை கழுவுதல் :

ஆயிஷா ( ரழி ) அவர்கள் அறிவிக்கின்றார்கள் " அல்லாஹ்வின் தூதர் எதையாவது உண்ணவோ அல்லது குடிக்கவோ விரும்பினால் முதலில் கைகளை கழுவிக்கொள்வார்கள் ( ஸுனன் அன் நஸயீ )

2. சமூக இடைவெளியை பேணுதல்./ தனிநபர் இடைவெளியை பேணுதல்

நபியவர்கள் கூறினார்கள் " யார் வேகமாக பரவக்கூடிய தொற்று நோயினால் பாதிக்கப்பட்டிருக்கின்றாரோ அவர்கள் சுகதேகிகளிடமிருந்து ஒதுங்கி இருக்கட்டும் ( புகாரி & முஸ்லீம் )

03 . வீட்டில் இருத்தல்

நபியவர்கள் கூறினார்கள் " சிங்கத்திடமிருந்து நீ எப்படி வெருண்டோடுவீரோ அப்படி தொழு நோயாளியிடமிருந்து வெருண்டோடு.  (புஹாரி)

04 . பிரயாண தடை

நபியவர்கள் கூறினார்கள் " ஒரு இடத்தில பிளாக் நோய் பரவியுள்ளது என நீங்கள் கேள்வியுற்றால் அந்த இடத்தினுள் நுழைய வேண்டாம் , அதே நேரம், நீங்கள் இருக்கும் இடத்தில பிளாக் நோய் பரவினால் அந்த இடத்தை விட்டு வெளியேற வேண்டாம். (புஹாரி )

05 . வீட்டில் தொழுதல்

அப்துல்லாஹ் இப்னு உமர் ( ரழி) அவர்கள் கூறினார்கள் , மிகவும் குளிரான , மழை நேர இரவுகளில் வீட்டிலேயே தொழுதுகொள்ளுங்கள் என அதான் சொல்லுமாறு முஅத்தினுக்கு கட்டளை ஈடுபவராக நபியவர்கள் காணப்பட்டார்கள் . (புஹாரி )

06 . நோய்க்கு நிவாரணி

நபியவர்கள் கூறினார்கள் " அல்லாஹ் எந்தவொரு நோயையும் மருந்து இன்றி அனுப்பவில்லை: (புஹாரி & முஸ்லிம்)

எனவே, இந்நெருக்கடியான காலகட்டத்தில் இவ்வொழுங்குகளை பின்பற்றி நம்மையும் நமது சமூகத்தையும் பாதுகாப்போம்.

குறிப்பு : இங்கு குறிப்பிடப்பட்டுள்ள ஹதீஸ்கள் ஹரமைன் இணையத்தில் தீர்க்கதரிசனமான ஆலோசனைகள் எனும் தலைப்பின் கீழ் அரபு மொழியில் பிரசுரிக்கப்பட்டவையாகும்.

தொற்று நோய்கள் ஏற்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் தொற்று நோய்கள் ஏற்படும் போது நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் Reviewed by Editor on April 13, 2020 Rating: 5