சலுகைக்காலம் நீடிப்பு


மின்சாரக் கட்டணத்தை செலுத்துவதற்காக வழங்கப்பட்ட சலுகைக்காலம் நீடிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

குறித்த சலுகைக்காலம் எதிர்வரும் 30ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ள அவர், நாட்டின் தற்போதைய நிலையினைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைய அசாதாரண சூழ்நிலை சீரான பின்னர் தவணை முறையில் மின்சார கட்டணத்தை வழங்குவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சலுகைக்காலம் நீடிப்பு சலுகைக்காலம் நீடிப்பு Reviewed by Editor on April 09, 2020 Rating: 5