குருநாகல் வைத்தியசாலையில் தீ பரவல்


குருநாகல் ஆதார வைத்தியசாலையில் இன்று (05) ஞாயிற்றுக்கிழமை காலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மருந்து பொருட்கள் வைத்திருக்கும் களஞ்சியசாலையில் இத் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குருநாகல் வைத்தியசாலையில் தீ பரவல் குருநாகல் வைத்தியசாலையில் தீ பரவல் Reviewed by Editor on April 05, 2020 Rating: 5