அமெரிக்க அதிபரின் முடிவு நியாயமற்றது - சீனா தெரிவிப்பு


(பிஸ்ரின் சஹாப்டீன்)

உலக சுகாதார ஸ்தாபனத்திற்க்கான நிதிப்பங்களிப்பை நிறுத்துவதற்க்கான அமெரிக்காவின் முடிவு நியாயமற்றது என சீனாவின் பிரதம தொற்று நோயியல் நிபுணர் சிங் கங் (Zeng Guang) தெரிவித்துள்ளார்.

உலகமே கொரோனாவுக்கு எதிராக போராடிவருவதுடன் உலக சுகாதார ஸ்தாபனம் ஒரு தீர்க்கமான இடத்தையும் அடைந்துள்ளது. இவ்வாறான நிலையில் அமெரிக்கா மாத்திரம் இவ்வாறான அறிவிப்பை விடுத்துள்ளமையானது அமெரிக்காவின் இயலாமையை காட்டுவதுடன் தனது நாட்டில் கொரோனா ஒழிப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள தோல்வியை திசை திருப்புவதற்க்காகவே இவ்வாறு அமெரிக்கா அறிவித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சர்வதேச உறவுகளில் ஒருதலைப்பட்சமாக, ஏனைய நாடுகளை விடுத்து முடிவெடுக்கும் தன்மை ( Unilateralism) நெடு நாட்களுக்கு இருக்காமாட்டாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதுடன் சீனா, உலக சுகாதார ஸ்தாபனத்திற்கான தனது நிதிப் பங்களிப்பை அதிகரிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க அதிபரின் முடிவு நியாயமற்றது - சீனா தெரிவிப்பு அமெரிக்க அதிபரின் முடிவு நியாயமற்றது - சீனா தெரிவிப்பு Reviewed by Editor on April 16, 2020 Rating: 5