அக்கரைப்பற்றில் கடை உடைப்பு


அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்திற்கு முன்னால் அமைந்துள்ள, அஷ்ரப் அஹமத் என்பவருக்கு சொந்தமான "ஆண்கள் ஆடை விற்பனை"செய்யும் கடை கடந்த 14ஆம் திகதி நள்ளிரவில் இனந்தெரியாத நபர்களால் உடைக்கப்பட்டு அங்கிருந்த பல ஆயிரம் ரூபாய் பெறுமதியான ஆடை மற்றும் இதர பொருட்களை களவாடி சென்றுள்ளதாக கடை உரிமையாளர் அஷ்ரப் அஹமத் தெரிவித்துள்ளார்.

ஸ்தலத்திற்கு அக்கரைப்பற்று பொலிஸார் வருகை தந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இந்த சம்பவம் தொடர்பில் கடை உரிமையாளர் அஷ்ரப் அஹமத் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்ட கருத்து பின்வருமாறு-


அல்ஹம்துலில்லாஹ்!

சொத்துக்கள் செல்வங்களை கொடுப்பதும் எடுப்பதும் இறைவனே. உங்களுக்கு திருடுமளவுக்கு வறுமை என்றால் என்னிடம் கேட்டிருக்கலாம், என்னால் முடிந்ததை உங்களுக்கு தந்திருப்பேன். நானும்தான் நீயும்தான் எதையும் கொண்டு செல்லப் போவதில்லை. 

இப்போதும் உங்களுக்கு போதுமில்லையென்றால் வாருங்கள், மன்னித்து உதவுகிறேன். ஆனால் திருடாதீர்கள். பசியிருந்து, தூக்கமிழந்து கஷ்டப்பட்டு உழைத்தவர்களின் உழைப்பை நீங்கள் திருடி உண்பதைவிட, பசித்திருந்து இறந்துவிடுவது, ஆகவும் மேல். மனதின் பெருத்த வலியோடும், கவலையோடும் சொல்கிறேன் நீங்கள் திருடியதில் உங்களுக்கு நஷ்டமே உண்டு. 

ஊரின் அசாதாரண நிலையை கருத்தில்கொண்டு கடந்த ஆறுநாட்களாக கடைப் பக்கம் வரவில்லை நான். இன்று மாலை சென்று பார்த்தபோது கடையை உடைத்து, திருடியிருக்கிறர்கள். அவர்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அள்ளியிருக்கிறார்கள். நேற்று பின்னிரவில் 3 மணியிலிருந்து நான்கு மணிவரைக்கும் அவர்கள் பதம் பாத்திருக்கிறார்கள், மூன்று நபர்கள் இணைந்தே அதுவும் பிரதான வீதியில் இருக்கும் என் கடையை உடைத்திருக்கிறார்கள்.

அவர்கள் நிம்மதியாய் உறங்கட்டும். ஆனால் இறைவனின் பார்வையிலிருந்து தப்பிவிடவே முடியாது. எனது ஒவ்வொரு வியர்வைத் துளிகளுக்கும் அவர்கள் தண்டனை பெற்றுக்கொள்வார்கள். ஒன்றில் திருந்துவார்கள் இல்லையேல் அழிவு நிச்சயம். ஒரு பெருத்த கவலையோடும், ஓர் புன்சிரிப்போடும் மீண்டும் சொல்கிறேன், நீங்கள் கஷ்டப்பட போகிறீர்கள். 

இறைவன் மேலானவன்!
அல்ஹம்துலில்லாஹ்!!
(2020.04.15)

அக்கரைப்பற்றில் கடை உடைப்பு அக்கரைப்பற்றில் கடை  உடைப்பு Reviewed by Editor on April 16, 2020 Rating: 5