கல்முனை பொலிஸாரின் மனிதாபிமான உதவி


(யூ.எம்.இஸ்ஹாக்)

கொரனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வீடுகளில் முடங்கியுள்ள மக்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் கல்முனை பொலிஸாரினால் உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.



கல்முனை பொலிஸ் பிரிவுக்குள் தெரிவு செய்யப்பட்ட 60 குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வு கல்முனை பொலிஸ் நிலைய தலைமைக் காரியாலய பொறுப்பதிகாரி கே.எச்.சுஜித் பெரேராவின் தலைமையில் நேற்று மாலை (11) பொலிஸ் நிலைய திறந்த வெளியரங்கில் நடை பெற்றது.


கல்முனை பொலிஸாரின் பங்களிப்புடன் கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை ,மருதமுனை,பெரியநீலாவணை பிரதேசத்தை சேர்ந்த 60 தமிழ், முஸ்லிம் குடும்பங்களுக்கு உலருணவு நிவாரணப் பொதிகள் வழங்கும் நிகழ்வில் கல்முனை பிராந்திய பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க ஜெயசுந்தர உட்பட பொலிஸ் அதிகாரிகள் கலந்து கொண்டு உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கி வைத்தனர்.
கல்முனை பொலிஸாரின் மனிதாபிமான உதவி கல்முனை பொலிஸாரின் மனிதாபிமான உதவி Reviewed by Editor on April 12, 2020 Rating: 5