வீதிகளில் பயணிக்கும் போது முகக் கவசம் அணிவது இன்று (11) முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியாமல் வீதிகளில் பயணிப்பவர்களை திருப்பி அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் நிலையங்களுக்கும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
ஊரடங்கு சட்ட அனுமதி பத்திரம் பெற்று கொண்டிருத்தல் அல்லது வீதிகளில் பயணிப்பதற்கு வேறு அனுமதி பெற்றிருந்தாலும் அவற்றினை கருத்திற்கொள்ளாமல் முகக் கவச உத்தரவை செயற்படுத்துமாறு அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அத்துடன் வாகனங்களில் பயணிப்போர் உட்பட அனைவரும் முகக்கவசம் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணிவது கட்டாயம்
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
Reviewed by Editor
on
April 11, 2020
Rating:
