தியாகத்துடன் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கொடை


இலங்கையில் கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் தியாகத்துடன் செயற்பட்ட அனைத்து பொலிஸ் அதிகாரிகளுக்கும் பணப் பரிசு  வழங்குவதற்கு பொலிஸ் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

2020.03.11ஆம் திகதியிலிருந்து 2020.04.10 திகதி வரையிலான காலப்பகுதியில் தியாகத் தன்மையுடன் செயற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கே இந்த தொகையை வழங்க தீர்மானித்துள்ளது.

பொலிஸ் மா அதிபரினால் அனுமதிக்கப்பட்ட குறித்த பணத்தொகையினை வழங்குவதற்காக மாகாணத்துக்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபருக்கு தேவையான ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தியாகத்துடன் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கொடை தியாகத்துடன் சேவையாற்றும் பொலிஸ் அதிகாரிகளுக்கு நன்கொடை Reviewed by Editor on April 11, 2020 Rating: 5