தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதி


ஒலுவில், தென்கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு அருகாமையில் உள்ள களியோடை பாலத்தின் ஊடக நிந்தவூர் பகுதிக்குச் செல்லும் சகல வாகனங்களுக்கும் தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே நிந்தவூர் நோக்கி பயணிக்க அனுமதியளிக்கப்படுகின்றது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ஜி.சுகுணன் அவர்களின் அறிவுறுத்தலுக்கமைவாக இதற்கான நடவடிக்கைகளை நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரி  அலுவலகத்தினால் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இச் செயற்பாட்டுக்கு பொலிஸ் மற்றும் இராணுவப் படையினர்  உதவி புரிந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதி தொற்று நீக்கி மருந்து விசிறப்பட்டதன் பின்னரே வாகனங்கள் செல்ல அனுமதி Reviewed by Editor on April 09, 2020 Rating: 5